போராட்டத்தில் உயிர் இழக்கும் விவசாயிகளின் அவல நிலை

கடந்த வருடமே குறைந்தபட்ச விலை, நில கையகப்படுத்தும் சட்டம் போன்றவற்றிற்காக விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.. கிட்டத்தட்ட லட்சம் விவசாயிகள் அப்போதே டெல்லியை நோக்கி கிளம்பினர்.. ஆனால், உடனடியாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, மத்திய அரசு பணிந்தது.

ஆனால், இந்த முறை அப்படி இல்லை.. மொத்தம் 3 சட்டங்கள் என்பதால் பாஜக அரசு அசைந்து கொடுக்காமல் உள்ளது.. 3 வேளாண் சட்டங்களையும் நீக்க கோரி, டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் திரண்டு முழக்கமிட்டு வருகிறார்கள்
இதில் இதுவரை போராட்டத்தில் 60 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 16 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி உயிரிழக்கிறார் இதற்கு அரசு பதிலளிக்க வேண்டும் என விவசாய சங்க பிரதிநிதிகள் கொந்தளிப்பு.

For more check Info-Uniqué Shorts

Comments